வீடியோ வாத்தி கம்மிங் பாடலுக்கு குத்தாட்டம் போட்ட நமீதா
தேர்தல் பிரசாரத்தின்போது நமீதாவுடன் சேர்ந்து பா.ஜ.க வேட்பாளர் வனத்தி சீனிவாசன் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார்.
தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் மும்முரமாக உள்ளன. தேர்தல் பிரச்சாரத்தில் கட்சியின் கொள்கைகள் மற்றும் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேட்பாளர்கள் பல்வேறு உத்திகளை வகுத்து வரும் நிலையில், கொண்டாட்டங்களுக்கு பஞ்சமில்லை.
கோவை தெற்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன், நமீதாவுடன் சேர்ந்து விஜய்யின் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனம் ஆடி அதை வீடியோவாக தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இவரது இந்த பதிவு நெட்டிசன்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. சமீபத்தில் பாஜகவில் இணைந்த நமீதா தற்போது தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
வீடியோ
Comments
Post a Comment